கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பாகிஸ்தான் பெண்!

கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பாகிஸ்தான் பெண்!
கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறந்த பாகிஸ்தான் பெண்!
Published on

கழிவறை என நினைத்து பாகிஸ்தான் விமானத்தின் அவசரகாலக் கதவை பெண் ஒருவர் திறந்ததால் பீதி ஏற்பட்டது.

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு பிகே 702 என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் சென்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இந்த விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, அவசரகால வழியை திடீரெனத் திறந்தார். அதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. இதைக் கண்ட விமானப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற பயணிகள் பீதி அடைந்தனர்.

இதையடுத்து விமானி, விமானத்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com