ரஷ்யா: சார்ஜ் ஏறும்போது குளியல் தொட்டிக்குள் விழுந்த செல்போன் - பெண் உயிரிழப்பு

ரஷ்யா: சார்ஜ் ஏறும்போது குளியல் தொட்டிக்குள் விழுந்த செல்போன் - பெண் உயிரிழப்பு
ரஷ்யா: சார்ஜ் ஏறும்போது குளியல் தொட்டிக்குள் விழுந்த செல்போன் - பெண் உயிரிழப்பு
Published on

குளியறையில் செல்போனை சார்ஜ் செய்து கொண்டு குளித்த பெண், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயதான ஒலேஸ்யா செமனோவா என்ற பெண்மணி, குளியறையில் தன்னுடைய போனை சார்ஜ் போட்டு விட்டு குளித்துள்ளார். அப்போது சார்ஜ் ஆகி கொண்டிருந்த மொபைல் போன், தவறுதலாக செமனோவா குளித்துக்கொண்டிருந்த குளியல் தொட்டிக்குள் விழுந்துள்ளஅது. இந்நிலையில், சார்ஜ் ஆகி கொண்டிருந்த போனில் இருந்து தண்ணீருனுள் மின்சாரம் பாய, செமனோவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது போன்ற இறப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள ரஷ்ய அரசு இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “ இந்தச் சம்பவம் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்சாதனங்களும், தண்ணீரும் பொருந்தாது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்தியுள்ளது. இது மொபைல் போன்ற சாதனங்களுக்கும் பொருந்தும். மொபைல் போன் நீரில் மூழ்கும் போது அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் அதுவே சார்ஜ் இணைப்பில் இருக்கும் போது அதன் விளைவு வேறு மாதிரியானதாக இருக்கும்.” என்று கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com