அமெரிக்காவிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பொறுப்பில்லாமல் உயிரை பணயம் வைத்து தடுப்புகளை மீறி சிங்கத்திற்கு அருகில் சென்ற பெண்ணிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள BRONX என்ற வன உயிரியல் பூங்காவின் தடுப்புச்சுவர் இருந்துபோதும், பெண் ஒருவர் அதை தாண்டி அங்கிருந்த சிங்கத்தின் அருகில் நெருங்கி சென்றார். ஹாய் என்று சிங்கத்திடம் கையசைத்த அந்தப் பெண், லேசான நடனமும் ஆடினார். அப்போது சிங்கம் ஒரு காலை முன்வைத்த போது BABY I LOVE YOU என்று அந்தப் பெண் கூறி சிங்கத்திடம் பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து இந்தப் பெண் மீது உயிரியல் பூங்கா புகார் அளித்துள்ளது. இதுகுறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம், “இந்தப் பெண் செய்த செயல் மிகவும் கண்டிக்க தக்கது. அது உயிர்ச் சேதம் ஏற்படும் அளவிற்கு மிகவும் ஆபத்தான செயல். இது போன்ற செயல்களை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இது தொடர்பாக நாங்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். விலங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும் நடுவில் இருக்கும் தடுப்பு இருவரின் பாதுகாப்பிற்காக தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.