’உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக் கூடாது’ - விளாடிமிர் புடின் எச்சரிக்கை

’உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக் கூடாது’ - விளாடிமிர் புடின் எச்சரிக்கை
’உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக் கூடாது’ - விளாடிமிர் புடின் எச்சரிக்கை
Published on

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று ஜெர்மனி, பிரான்ஸுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் மூன்று மாதங்களையும் தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

இருந்தபோதிலும், உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவத்தால் இன்னமும் கைப்பற்ற முடியவில்லை. இதனால் கீவ் நகரை சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்ய படைகளை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் விளாடிமிர் புடின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக் கூடாது என புடின் வலியுறுத்தியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு ஆயுதங்கள் வழங்குவது தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் எனவும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com