'வில் ஸ்மித்தை வெளியேற சொன்னோம்; ஆனால்...' - ஆஸ்கர் அகாடமி விளக்கம்

'வில் ஸ்மித்தை வெளியேற சொன்னோம்; ஆனால்...' - ஆஸ்கர் அகாடமி விளக்கம்
'வில் ஸ்மித்தை வெளியேற சொன்னோம்; ஆனால்...' - ஆஸ்கர் அகாடமி விளக்கம்
Published on

''ஆஸ்கர் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த பின் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுமாறு கூறினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்'' என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை பற்றி  நகைச்சுவையாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நடிகர் வில் ஸ்மித்தின் செயல், உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த காட்சியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது தொடர்பாக ஆஸ்கர் அகாடமி விளக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால் வில் ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com