உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சுவை நெருங்கும் காட்டுத் தீ!

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சுவை நெருங்கும் காட்டுத் தீ!
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சுவை நெருங்கும் காட்டுத் தீ!
Published on

உலக புராதானச் சின்னங்களின் ஒன்றாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழும் மச்சு பிச்சு நகருக்கு அருகே பற்றி எரியும் நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பெரு நாட்டில் கஸ்கோ நகருக்கு அருகே மிக உயரமான மலையின் மீது அமைந்தள்ள பழமையான நகரமே மச்சு பிச்சு. இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாக மச்சு பிச்சு நகரம் கருதப்படுகிறது.

இந்நகரம் அமைந்துள்ள மலைத்தொடரில் விவசாயிகள் பயிர்களை விதைப்பதற்கு முன் புல்லை எரித்ததால் எதிர்பாராத விதமாக காட்டுத்தீயாக பரவத் துவங்கியது. வயல்கள் வழியாக ஏற்பட்ட காட்டுத்தீ கடந்த 2 நாட்களாக பற்றி எரிகிறது. அடுத்தடுத்து பற்றிப் பரவி வரும் நெருப்பு, தற்போது புராதனச் சின்னமான மச்சு பிச்சுவை நெருங்கியுள்ளது.

இந்த அபாயத்தை மேலும் பரவ விடாமல் தடுக்க பெரு நாட்டின் தீயணைப்பு வீரர்கள், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர். சுமார் 20 ஹெக்டேர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அருகிலுள்ள நகரமான குஸ்கோவின் மேயர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com