மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்! விசா கிடைப்பதில் தாமதம்.. ஆன்லைனில் முடிந்த திருமணம்!

சமீபகாலமாக எல்லை தாண்டிய காதல் செய்திகள், ஊடகங்களில் முக்கியத்துவம் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் இந்தியா வர தயாராக உள்ளார்.
ஆன்லைனில் நடந்த திருமணம்
ஆன்லைனில் நடந்த திருமணம்புதிய தலைமுறை
Published on

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் அமீனா. ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்தவர் அர்பஸ்கான். இருவரும் தெரிந்த உறவினர்கள் மூலம் பழக்கமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் பேசியதில், திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். உடனே திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்திருக்கின்றன. இருவரின் திருமணத்தையும் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அமீனா பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவுக்கு வருவதற்காக விசா எடுக்க விண்ணப்பம் செய்தார்.

அமீனாவுக்கு இந்திய விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இருவரின் திருமணமும் வீடியோ கால் மூலம் நடத்தி முடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் அமீனாவும், இந்தியாவில் அர்பாஸ் கானும் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணம் சார்ந்த சடங்குகளையும் முறைப்படி இருவரின் குடும்பமும் வீடியோ மூலமாகவே செய்து முடித்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்து ஜோத்பூர் 'காசி' முன்னிலையில் நடந்து முடிந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அப்ரஸ்கான், ”நாங்கள் இருவரும் எங்கள் நாடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருமணம் செய்துகொண்டோம். பாகிஸ்தானை சேர்ந்த மணப்பெண்ணுக்கு இந்தியா வர விசா கிடைக்காததால்தான் ஆன்லைனில் திருமணம் செய்துகொண்டோம்.

இதற்காக காசியிடம் சான்றிதழ் பெற்றுள்ளோம். இனி, அமீனா எளிதாக இந்தியாவுக்கு வரலாம். அதற்காக, மீண்டும் அமீனா விசாவிற்கு விண்ணப்பிப்பார். நான் பாகிஸ்தான் சென்று திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. அமீனா இந்தியாவிற்கு வந்தவுடன் நாங்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்வோம்.

இங்கு 'நிக்காஹ்' நடத்தப்பட்டது மட்டுமின்றி, குடும்பத்தினர் அனைத்து சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர். விரைவில் எங்கள் திருமணம் சட்டப்படி இந்தியாவில் நடைபெறும். இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்திருமணம் இரு நாடுகளுக்கான நட்புறவுக்கு ஓர் எடுத்துக்காட்டு" எனத் தெரிவித்துள்ளார்.

அர்பாஸின் தந்தை முகமது அப்சல், ”மணமகள் அமீனாவின் குடும்ப உறுப்பினர்களுடன் எங்களுக்கு உறவு உள்ளது. எங்களுடைய உறவினர் ஒருவர், ஏற்கெனவே பாகிஸ்தானில் இதே குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்” என்றார். இந்த திருமணம் ஆன்லைனிலேயே நடந்தாலும், பாகிஸ்தான் பெண் அமீனா, இன்னும் இந்தியா வரவில்லை. சட்டச் சிக்கலின்றி வருவதற்கான வேலைகளில் அவர் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com