யூரோபா கிளிப்பர் செயற்கைக்கோள்.. வியாழனின் துணைக்கோளான யூரோப்பாவை ஆராய்வதற்கு அனுப்பப்படுவது ஏன்?

நமது பூமியில் இருப்பதைப்போன்று பல விஷயங்கள் இந்த துனைக்கோளுடன் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.
யூரோப்பா துனைக்கோள்
யூரோப்பா துனைக்கோள்புதியதலைமுறை
Published on

நமது சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பல துணைக்கோள்கள் இருக்கையில் குறிப்பாக வியாழனில் இருக்கும் 95 நிலவுகளில் யூரோபா நிலவை ஆராய்வதற்காக விஞ்ஞானிகள் யூரோபா கிளிப்பர் என்ற விண்கலத்தை அனுப்பியக் காரணத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

நாசாவின் Europa Clipper விண்கலம் அக்டோபர் 14, 2024 அன்று புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து SpaceX Falcon Heavy ராக்கெட்டில் ஏவப்பட்டது. இது 2030 ஆம் ஆண்டில் வியாழன் கிரகத்திற்கு அருகில் செல்லும்.

யூரோப்பா துணைக்கோளின் சிறப்பம்சம்!

இந்த யூரோபா துணைக்கோளுக்கு சில சிறப்பம்சம் இருக்கிறது. இது நமது பூமியில் இருப்பதைப்போன்று பல விஷயங்கள் இந்த துணைக்கோளுடன் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். முக்கியமாக இந்த துணைக்கோள் அடர்த்தியான பனி அடுக்கைக் கொண்டிருந்தாலும், இதன் அடியில் பிரம்மாண்ட அளவில் பூமியில் போன்று, உப்புநீரால் ஆன பெருங்கடல் இருப்பதாக கூறுகின்றனர். இந்த கடல் நீரானது பூமியின் கடல் நீரைவிட இரண்டு மடங்கு அதிகம் இருக்கலாம் என்கின்றனர். ஆகையால் இந்த துணை கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால்... பூமியில் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை பெற்று கடல் உயிரினங்களானது உயிர்வாழ்கிறது ஆனால் அங்கு சூரிய ஒளியிலிருந்து வெப்பம் கிடைக்காது அப்புறம் எப்படி உயிரினங்கள் உயிர்வாழும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

இதற்கு விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால், நமது பூமியின் சூரிய வெப்பம் விழாத ஆழ்கடலின் அடியில் வெப்பத்தை வெளியிடும் சில துவாரங்கள் இருக்கிறது என்றும் அதனால் ஆழ்கடல் வெப்பத்தைப்பெற்று உயிரினங்கள் வாழ்வதைப்போன்று, யூரோப்பா நிலவில் இருக்கும் கடலின் அடி ஆழத்தில் வெப்பத்தைக்கொடுக்கும் துவாரங்கள் இருக்கலாம். அதனால் உயிரினங்கள் அங்கு தோன்றலாம் என்கிறார்கள். ஆகவே நமது விஞ்ஞானிகள் தொலைதூரத்தில் உள்ள இந்த துணைக்கோளை ஆராய்ச்சி செய்வதற்கு விண்கலத்தை அனுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com