விதிமுறைகளை பூர்த்தி செய்யாத, பாதுகாப்பற்ற தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒரு போதும் அங்கீகாரம் வழங்காது என அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் போட்டி போட்டு கொண்டு கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா ஏற்கனவே கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவோ நவம்பர் 1ஆம் தேதி முதல் தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கும் என அறிவித்துள்ளது. முழுமையாக பரிசோதனைகள் செய்யப்படாமலே இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கருத்து வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது.