“கொரோனாவால் இனிதான் மோசமான நிலை” - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

 “கொரோனாவால் இனிதான் மோசமான நிலை” - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
 “கொரோனாவால் இனிதான் மோசமான நிலை” - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
Published on
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இன்னும் மோசமான நிலை இனிதான் வரப்போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், கொரோனா வைரசுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 
 
 
கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதை.குறிக்கும் வகையில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம், ஆறு மாதங்களுக்கு முன் வரை நமது உலகமும் வாழ்க்கையும் ஒரு புதிய வைரசால் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்படும் என்பதை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 
 
 
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்துள்ளதாகக் கூறியுள்ள டெட்ராஸ், அனைத்து நாடுகளும் நீண்டகால போராட்டத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்துவரும் மாதங்களில் வைரசுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ள டெட்ராஸ் இந்த தொற்று இப்போதைக்கு முடியப்போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்றும் இப்போதைக்கு முடிவதாக இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார். 
 
 
மோசமான நிலை இனிதான் வரப்போவதாகக் கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தற்போதைய சூழலில் இன்னும் மோசமான நிலை வரும் என்று அஞ்சவைப்பதாகக் கூறியுள்ளார் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியச் சீனாவுக்கு அடுத்த வாரத்தில் ஒரு குழுவை அனுப்ப உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுடன் வாழப் பழகுவதைத் தவிர வேறு வழியில்லை என சில வாரங்களுக்கு முன்பே மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்தது பேசுபொருளான நிலையில், உலக சுகாதார அமைப்பும் இப்போது அதையே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com