இந்தியாவில் பெட்ரோல் விலை ஹாங்காங், ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவும், சீனா, பிரேசில், ஜப்பான் அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது அதிகமாகவும் உள்ளது. ஆஸ்திரேலியா, துருக்கி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக உள்ளது.
உலகிலேயே அதிகமான விலைக்கு பெட்ரோலை விற்கும் நாடு “ஹாங்காங்”. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பில் 218 ரூபாயாக உள்ளது. அடுத்ததாக நார்வேயில் 207 ரூபாய்க்கும் பெட்ரோல் விற்கப்படுகிறது. ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஒரு லிட்டர் 177 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் 96 ரூபாய் 72 காசுகளுக்கு பெட்ரோல் விற்கப்படும் நிலையில் அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளை ஒப்பிட்டால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 64 ரூபாயாக உள்ளது. நேபாளில் 94 ரூபாய்க்கும் வங்கதேசத்தில் 79 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது.
உலகிலேயே குறைந்த விலையாக வெனிசுலாவில் 1 ரூபாய்க்கும் லிபியாவில் 2 ரூபாய்க்கும் ஈரானில் 3 ரூபாய்க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் விலை அதிகமாக உள்ளது. உலகில் அதிக எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தும், இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.