வாக்னர் படை எங்கே? கேள்வி கேட்கும் உலக நாடுகள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் வாக்னர் குழுவின் கூலிப்படையினரைக் காண முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
வாக்னர் படை
வாக்னர் படைtwitter
Published on

ரஷ்ய அரசுக்கு எதிராக, அந்நாட்டு தனியார் ராணுவ கூலிப்படையான வாக்னர் அமைப்பு கடந்த ஜூன் மாதத்தில் திடீர் கிளர்ச்சியை உண்டாக்கியது. இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். பின் வாக்னர் குழுவினருக்கும், ரஷ்ய அரசுக்கும் சமரசம் ஏற்பட்டது.

வாக்னர் படை
ஒரே நாளில் முடிவுக்குவந்த உள்நாட்டு கிளர்ச்சி: எப்படி சமாளித்தார் புதின்? வாக்னர் குழு என்னவாகும்?

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரசத்தில், வாக்னர் குழுத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவர் பெலாரஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ரஷ்யா அறிவித்தது. பிரிகோஸின் தனது வீரர்களை உக்ரைனில் உள்ள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார்.

பிரிகோஸின்
பிரிகோஸின்

இந்த நிலையில், கிளர்ச்சி முடிவுக்கு வந்த சில நாட்கள் (ஜூன் 29ஆம் தேதி) கழித்து வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளிவந்தன. ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது. இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசிக்கொண்டனர், சந்திப்பு எப்படி முடிவுக்கு வந்தது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அதேநேரத்தில், ப்ரிகோஜினும் அவரது ஆதரவளார்களும் விளாடிமிர் புடினைச் சந்தித்து அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்ததாக ரஷ்யா தெரிவித்திருந்தது.

இதற்கிடையே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு, உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ’வாக்னர் கூலிப்படையினர் இனி உக்ரைனில் எந்தப் போர் நடவடிக்கைகளிலும் பங்கேற்க மாட்டார்கள். அவர்களை, நாங்கள் சமீபகாலமாக உக்ரைன் போரில் பார்க்க முடியவில்லை’ என பென்டகன் செய்தியாளர் பாட் ரைடர் தெரிவித்திருந்தார். இதனால், வாக்னர் படை வீரர்கள் எங்குள்ளனர், அவர்களின் அடுத்த திட்டம் எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரத்தில் இதுதொடர்பான கேள்விக்கு ரஷ்ய அதிபர் புடின், “நாட்டில் நடைபெற்ற கிளர்ச்சிக்குப் பிறகு வாக்னர் குழு கூலிப்படையினர், ரஷ்யா ராணுவத்துடன் ஒன்றாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

புடின்
புடின்

என்றாலும் வாக்னர் கூலிப்படையினர் விவகாரத்தில் இன்னும் மர்மமே நீடிப்பதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன. உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, வாக்னர் குழு படைத்தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றார்.

இவர் குழுவிலான ராணுவ அமைப்பு, உக்ரைனில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியதிலும் கைப்பற்றியதிலும் தூணாகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்டது. ரஷ்யா ராணுவத்தின் மீது பிரிகோஸின் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதை அடுத்து, உள்ளூர் கிளர்ச்சியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com