ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்புவது எப்போது?-25 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவு
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு உலக நாடுகளில் வொர்க் ஃபிரம் ஹோம் தொடர்ந்து வருகிறது. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் தனது ஊழியர்கள் இப்போதைக்கு அலுவலகம் வரவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புவது இப்போதைக்கு இல்லை என்பதை ஆய்வு முடிவின் அடிப்படையில் கண்டறிந்துள்ளது பாரிஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் OECD என்ற அமைப்பு.
சுமார் 25 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் அடிப்படையில் இதனை அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் மற்றும் நிறுவனர்கள் என இருதரப்பும் வொர்க் ஃபிரம் ஹோம் பாணியை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு வொர்க் ஃபிரம் ஹோமில் ஊழியர்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயற்ற நல்வாழ்வுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவது சாதகம் என ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக டிஜிட்டல் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் நாடுகளில் வொர்க் ஃபிரம் ஹோம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கிடைத்த சாதகங்கள் எதிர்வரும் ஆண்டில் அலுவலக வேலை சூழலை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதில் சந்தேகம் இருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வறிஞர்கள் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.
இந்தியாவில் ஐடி துறையில் ஊழியர்கள் பணிக்கு திரும்பினாலும் ‘வாரத்திற்கு சில நாட்கள் மட்டும் அலுவலகத்தில் வேலை, மற்ற நாட்களில் வீட்டில் இருந்தபடி வேலை’ என சொல்லியுள்ளதாக OECD தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 14 : சச்சின் டெண்டுல்கரின் டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸ்!