யூதர்களுக்கென்று தனி நாடாக இஸ்ரேல் உருவாக பல காரணங்கள் இருந்தன. ஜெருசலேம் தேவாலயம் சிதைக்கப்பட்ட பின் யூதர்கள் இனம் உலகம் முழுவதும் ஆங்காங்கே சிதறியிருந்தது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நடந்த சீயோனிசம் இயக்கத்தின் மூலமாகவே அவர்களது தனிநாடு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஓட்டமன் ராஜ்ஜியத்தின் கீழிருந்த பாலஸ்தீனத்தில் ஒரு தனிநாடாக இஸ்ரேலை பெற பல அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் இருந்தாலும் அவற்றில் ஐன்ஸ்டீன் பங்கேற்கவில்லை. யூதர்களின் ஒரு பிரபல அடையாளமாக இருந்த அவர் சீயோனிசம் இயக்கத்திற்கு தனது முழு ஆதரவையும் அளித்திருந்தார்.
பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று ஒரு தனி பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டுமென்று நினைத்த அவர் அதன் மூலம் அறிவியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இஸ்ரேலை முன்னேற்ற முடியும் என்று அவர் நம்பினார். 1948 ஆம்
ஆண்டு ஜெருசலேத்தில் ஹெப்ரூ பல்கலைக்கழகத்தை அமைக்க வலியுறுத்தி வந்த கடிதத்தில் அவர் கையெழுத்திட்டார். அவரது உள்ளீடு இதில் இருப்பதன் மூலம் உலகம் முழுவதும் பல்கலைக்கழகத்தை அமைக்க நிதி வழங்கப்பட்டது.
இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டிற்கான கலாச்சார மற்றும் அறிவுசார் அடித்தளத்தை அமைக்க ஐன்ஸ்டீன் ஒரு முக்கிய காரணியாக விளங்கினார்.