கனடா கல்விக்கு 'NO' சொல்லும் இந்தியர்கள்.. 5 ஆண்டுகளில் 8% குறைந்த மாணவர் எண்ணிக்கை.. பின்னணி என்ன?

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கனடாவை தேர்வுசெய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியா - கனடா
இந்தியா - கனடாட்விட்டர்
Published on

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பு உண்டு என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கொளுத்திப் போட்ட விவகாரத்தில் இருநாடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக, இரு தரப்பும் தூதர்கள் வெளியேற்றம் தொடங்கி பல்வேறு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

இந்த நிலையில், கனடாவில் மேலாண்மை சார்ந்த படிப்புகளில் (Graduate Management Education) படிக்கச் செல்லும் இந்தியர்களின் ஆர்வம் பெரிதும் குறைந்திருக்கிறது. அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிவைச் சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கனடாவை தேர்வுசெய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது. அதுவே மத்திய மற்றும் தெற்காசியாவைத் தேர்வு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த கருணாஸ் படநடிகை: அமராவதியில் மீண்டும் போட்டி..வலுக்கும்எதிர்ப்பு! நவ்நீத் ராணா யார்?

இந்தியா - கனடா
காலிஸ்தான் தலைவரை கொல்ல சதி: இந்தியா மீது அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு-மீண்டும் வம்பிழுக்கும் கனடா?

’வருங்கால மாணவர்கள் கணக்கெடுப்பு 2024’ அறிக்கையின்படி, இந்தச் சரிசானது கடந்த 2020 முதல் தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் காலத்தில் 14% - 11 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2023இல் 10% - 6 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் இந்த எண்ணிக்கை மத்திய மற்றும் தெற்காசியா நாடுகளான அமெரிக்கா, மத்திய மற்றும் தெற்காசியா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைத் தேர்வு செய்வதில் உயர்ந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. கனடாவின் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம், இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உறவின் விரிசல்தான் எனச் சொல்லப்படுகிறது. தவிர, கனடாவில் வேலைவாய்ப்புகள் பெரிதாக இல்லாததும், பொருளாதாரச் சூழல் சரியாக இல்லாததும் காரணமாகச் சொல்லப்படுகிறது.

சர்வதேச அளவில் இந்தியர்கள் விரும்பி சென்று படிக்கும் நாடுகளில் 4வது இடத்தில் கனடா இருக்கிறது. இங்கு இன்டர்நேஷனல் எம்.பி.ஏ டிகிரியை படிக்க முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். QS Global MBA தர வரிசை 2024ல் கூட டாப் 100 B-Schools பட்டியலில் கனடாவை சேர்ந்த 6 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிக்க: அருணாச்சல்: தேர்தலுக்கு முன்பே வாகைசூடும் பாஜக.. முதல்வர் உள்பட 5 பாஜகவினர் போட்டியின்றித் தேர்வு!

இந்தியா - கனடா
”தனிநாடு கோரிக்கை” - சுதந்திர போராட்ட காலம் to கனடா பிரச்னை! காலிஸ்தான் இயக்கம் ஓர் வரலாற்று பார்வை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com