கடும் வீழ்ச்சியைச் சந்தித்த கச்சா எண்ணெய்.. பின்னணி காரணம் என்ன? குறையுமா பெட்ரோல், டீசல் விலை?

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை தற்போது 70 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்புதிய தலைமுறை
Published on

70 டாலருக்கு கீழ் சரிந்த கச்சா எண்ணெய் விலை!

உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று, பெட்ரோலியப் பொருட்கள். அந்தப் பெட்ரொலியத்தை நம்பித்தான் இந்தியா, சீனா போன்ற நாடுகள் உள்ளன. நமது நாட்டில் கச்சா எண்ணெய்யின் தேவையில், 85 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் எரிபொருள் தேவையைப் பூர்த்திசெய்யவும், கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதற்கும் அதிகளவு இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை தற்போது 70 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது.

இதையடுத்து, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு காரணங்கள் இவைதான்!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, நிர்ணயம் செய்துவருகின்றன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்றஇறக்கத்துடன் இருந்துவந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது. அதாவது, கடந்த 2021க்குப்பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 68 டாலராகக் குறைந்தது. OPEC-இன் திருத்தப்பட்ட தேவை கணிப்புகள், சீனாவின் குறைந்த நுகர்வு, மின்சார வாகன விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு ஆகியனவே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை; இந்திய தத்துவஞானியே..” - ம.பி அமைச்சர் சர்ச்சை பேச்சு!

கச்சா எண்ணெய்
34 சதவீதம் சரிந்தது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகும் கச்சா எண்ணெய்! பின்னணி என்ன?

பங்குகள் சரிவு - கவலையில்ல் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைவதால், இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. முக்கியமாக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் எனப்படும் ஒஎன்ஜிசி, ஆயில் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி ஆகியவற்றின் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆயில் இந்தியா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கின் விலை 5 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கோ, 4 சதவீதமும், ஓஎன்ஜிசி பங்கின் விலை 2 சதவீதமும் சரிந்துள்ளது. அதேநேரத்தில், கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில்தான் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

"லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும்" - அன்புமணி ராமதஸ்

எனவே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடும் சரிவால் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர், ”உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்| ”அவர்கள் ஆபத்து நிறைந்தவர்கள்”-ட்ரம்ப், கமலா ஹாரிஸ் நேரடியாக காரசார விவாதம்

கச்சா எண்ணெய்
இந்தியாவில் எகிறும் கச்சா எண்ணெய் இறக்குமதி.. இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத உச்சம்!

குறையும் கச்சா எண்ணெய்யின் தேவை!

இது ஒருபுறமிருக்க மறுபுறம், OPEC அமைப்பு வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், உலகளாவிய கச்சா எண்ணெய்யின் தேவை 2024ஆம் ஆண்டில் தினசரி 2.03 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட தினசரி 2.11 மில்லியன் பேரல்களிலிருந்து குறைந்துள்ளது. கடந்த மாதம் வரை, OPEC நிறுவனம் கடந்த ஜூலை 2023-ஆம் ஆண்டு முதன்முறையாக கச்சா எண்ணெய் தேவை தொடர்பான கருத்துக்கணிப்பை வெளியிட்டு அதை மாற்றமல் வைத்திருந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்துள்ளது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

சீனாவின் நுகர்வு வெகுவாக சரிவு

அதன்படி, தற்போது ஒருநாளைக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய தேவையைவிட 80,000 bpd குறைவாகவே உள்ளது. எண்ணெய் உற்பத்தியாளர்களின் குழுவும் அடுத்த ஆண்டு தேவை வளர்ச்சி 1.7 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்றும், இது முந்தைய ஆண்டின் மதிப்பீட்டில் இருந்து 40,000 பேரல்கள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவின் நுகர்வு வெகுவாக சரிந்துள்ளது. சீனாவில் தேவை குறைவது குறித்த தகவல் கச்சா எண்ணெய் சந்தையை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தான்|மகள் தலையில் சிசிடிவி கேமரா; 24மணிநேரமும் கண்காணிக்கும் தந்தை-பின்னணி இதுதான் #ViralVideo

கச்சா எண்ணெய்
30% சரிந்தது கச்சா எண்ணெய் விலை : 29 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி ஏன்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com