கனடா | பிரதமர் ட்ரூடோ ராஜினாமா செய்ய காலக்கெடு! சொந்த கட்சியினரே எதிர்ப்பு.. பின்னணிக் காரணம் என்ன?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்த கட்சி எம்.பிக்கள் கெடு விதித்துள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோஎக்ஸ் தளம்
Published on

கனடா பிரதமர் ராஜினாமா செய்ய கெடு

கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் நேரடியாக குற்றம்சாட்டியதால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து காரணமாக இரண்டு நாடுகளிலும் இருந்த தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று நடந்த லிபரல் கட்சி எம்.பிக்களின் ரகசிய கூட்டத்தில் ட்ரூடோவும் கலந்துகொண்டார். அப்போது, ஒவ்வொரு எம்.பிக்களுக்கும் பேசினர்.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி
ஜஸ்டின் ட்ரூடோ, மோடிட்விட்டர்

சொந்தக் கட்சி 24 எம்.பிக்கள் போர்க்கொடி

அதனைப் பயன்படுத்தி பேசிய எம்.பிக்கள், ட்ரூடோ மீதான அதிருப்தி மற்றும் குறைகளையும் வெளிப்படையாக கூறினர். மேலும், ட்ரூடோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 24 எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதமும் கொடுக்கப்பட்டது. அதில், வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ராஜினாமா செய்யாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், பல எம்பிக்கள் ட்ரூடோவுக்கு ஆதரவாகவே இருப்பதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: பிரிஜ் பூஜன் சிங்கிற்கு எதிரான போராட்டம்|வெளியான அதிர்ச்சி தகவல்.. உண்மையை உடைத்த சாக்‌ஷி மாலிக்!

ஜஸ்டின் ட்ரூடோ
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் | இந்தியா மீது தடைவிதிக்க போகிறதா கனடா?

ராஜினாமா குறித்துப் பேசிய கனடா பிரதமர்

இந்தக் கூட்டம் முடிந்ததும் ​​ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் சிரித்தப்படியே, ”கட்சி பலமாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக ட்ரூடோ அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மார்க் மில்லர், "எம்பிக்கள் சிலர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். அவர்கள் நேரடியாக ட்ரூடோவிடம் இதுகுறித்து முறையிட்டனர். அதேநேரம் இது ஒன்றும் கோட் ரெட் இல்லை. பிரதமரால் இந்த பிரச்னைகளை எளிதாகக் கையாள முடியும்" என்றார்.

கனடா பிரதமர் மீது அதிருப்தி ஏற்பட என்ன காரணம்?

கனடா நாட்டின் தற்போதைய பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2021இல் நடைபெற்ற பிரதமர் தேர்தலிலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைத்தார். இதனால், கடந்த ஆறு மாத காலமாக லிபரல் கட்சி மீது அதிருப்தி அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய விவகாரம், சர்வதேச சிக்கல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆளும் லிபரல் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அடுத்த தேர்தலில் வெல்ல வாய்ப்பே இல்லை என்ற சூழலே இருக்கிறது. இந்த நேரத்தில் ட்ரூடோ விலகினால் அது அதிருப்தியைக் குறைக்கும் என்பதே லிபரல் கட்சி எம்பிக்களின் கருத்தாகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்படி பைடன் போட்டியில் இருந்து விலகிய பிறகு, ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகரித்ததைப் போன்று கனடாவிலும் நடக்கும் என்பது அதிருப்தி எம்பிக்களின் கருத்தாக உள்ளது. இதனாலேயே அவர்கள் ராஜினாமா கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: பன்னுன் கொலை முயற்சி | முன்னாள் ’ரா’ அதிகாரி விகேஷ் யாதவ் மீது US குற்றச்சாட்டு.. மறுக்கும் இந்தியா!

ஜஸ்டின் ட்ரூடோ
முற்றும் வார்த்தை மோதல்.. கனடா - இந்தியா மோதலின் பின்னணி என்ன?

அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி Abacus Data என்ற ஏஜென்சி வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பில், 47 சதவீதம் பேர் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், 21 சதவீதம் பேர் அவர் பதவியில் இருக்க முடியும் எனவும் பதிலளித்திருப்பதாக அது தெரிவித்துள்ளது. மேலும், லிபரல் கட்சியில் இருக்கும் கனேடியர்களில், 57% பேர் ஜஸ்டின் ட்ரூடோவை ராஜினாமா செய்யுமாறும், மீண்டும் போட்டியிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். 24% பேர் மட்டுமே அவரை மீண்டும் போட்டியிட ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சிபிசி நியூஸின் கருத்துக்கணிப்பின்படி, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிதான் 42.5 சதவீத ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கும் எனவும், அது, நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையாக 217 இடங்களைப் பெறும் எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆளும் லிபரல் கட்சி வெறும் 23.2 சதவீத ஆதரவுடன் 61 இடங்களை மட்டுமே பெறும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க டாலருக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. விரைவில் புதிய நாணய மதிப்பு.. பிரிக்ஸ் மாநாட்டில் ஆலோசனை!

ஜஸ்டின் ட்ரூடோ
இந்தியா - கனடா உறவில் விரிசல்: “ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு” - மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com