மீண்டும் கொரோனா உக்கிரம் - சீனாவின் நிலை என்ன? - 5 முக்கிய தகவல்கள்!

மீண்டும் கொரோனா உக்கிரம் - சீனாவின் நிலை என்ன? - 5 முக்கிய தகவல்கள்!
மீண்டும் கொரோனா உக்கிரம் - சீனாவின் நிலை என்ன? - 5 முக்கிய தகவல்கள்!
Published on

சீனாவில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொரோனா பரவல் விகிதம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகரித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சீனாவின் நிலை என்ன?

1. சீனாவில் நேற்று முன்தினம் அங்கு 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 3,101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு சீன மெயின்லான்டில் 3,86,276   பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

2.தேசிய சுகாதார ஆணைய தகவலின்படி கடந்த திங்கட்கிழமை 5 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை புதிய இறப்புகள் பதிவாகவில்லை.

3. சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா காரணமாக சர்வதேச சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர்கள் கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

4.அடுத்த 90 நாட்களில் சீன மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு அதிகமான மக்களும், உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று பிரபல தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபெய்கல்-டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக கொரோனா மரணங்கள் லட்சக்கணக்கில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

5.சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா உள்பட உலக நாடுகள் பலவற்றிற்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் தெரிவித்துள்ளார்.

தவற விடாதீர்: 'ஊரடங்கை தொடராவிட்டால் 20 லட்சம் மக்கள் கொரோனாவால் இறப்பார்கள்' - சீனாவுக்கு அலர்ட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com