”கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?”- கொலையில் முடிந்த நண்பர்களின் விவாதம்!

இந்தோனேசியாவில் மதுபோதையில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா ? என்று தொடங்கிய கேள்வியால் , இறுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா
இந்தோனேசியாமுகநூல்
Published on

இந்தோனேசியாவில் மதுபோதையில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா ? என்று தொடங்கிய கேள்வியால், இறுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் தினமாகிய இன்று, நண்பர் தின வாழ்த்துக்களை அனைவரும் பகிர்ந்து கொண்டிருக்கும் சூழலில், இந்தோனேசியாவில் மதுபோதையில் நண்பர்களிடையே முற்றிய வாதத்தால், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தோனேசியாவில், புலவேசி மாகாணத்தில் வசித்து வருபவர் டிஆர் என்னும் நபர். இவர், கடந்த ஜுலை 24 ஆம் தனது நண்பர் கதிர் மார்கஸ் என்பவரை மது அருந்த வருமாறு அழைத்துள்ளார்.

உற்சாகமாக இருவரும் மது அருந்தியும் உள்ளனர். பிறகு அடித்த போதை தலைக்கேறியநிலையில், இருவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அது என்னவென்றால்... முட்டையிலிருந்து கோழிவந்ததா இல்லை? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்று...

இருவரும் மாறி மாறி கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால், இறுதியில் அதற்கு பதில் கிடைக்கவில்லை..

எனவே, கதிர் மார்கஸ், இங்கிருந்தால் சரியாக வராது என நினைத்து அங்கிருந்து விலக ஆரம்பித்துள்ளார். ஆனால், பதில் கூறிதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார் டிஆர். ஆனால், கதிர் மார்கஸ் அங்கிருந்து செல்லவே, இதனால் கோபமடைந்த டிஆர், கதிர் மார்க்ஸை வாகனத்தில் துரத்தியபடி சென்று ஆத்திரம் தீரும்வரை கிட்டதட்ட 15 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்தோனேசியா
’இந்தியரா.. கறுப்பரா?’ - கமலா ஹாரீஸின் இனம் குறித்து கேள்வி எழுப்பிய ட்ரம்ப்.. வெடித்த சர்ச்சை!

இதனால், கதிர் மார்க்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவே, இறந்தவரின் உடலை கைப்பற்றி டிஆரையும் கைது செய்துள்ளனர். மேலும் , அவரது கையில் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், "சந்தேக நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 18 ஆண்டுகள் வரை இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆரம்பத்தில் கோழி, முட்டை புதிரில் தொடங்கிய இந்த சண்டனை, இறுதியில் ஒருவரின் உயிரையே பறித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com