அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெறப் போவது யார்? வித்தியாசமாகக் கணித்த AI தொழில்நுட்பம்!

உலகளவில் புரட்சியை ஏற்படுத்திவரும் செயற்கை நுண்ணறிவும் (AI) அமெரிக்க அதிபர் தேர்தலில் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப்
கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்
Published on

உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல், இன்று (நவ.5) விறுவிறுப்பாய் நடைபெற்று வருகிறது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸும் களத்தில் உள்ளனர். தேர்தலை அடுத்து கருத்துக்கணிப்பு பற்றிய விவரங்களே இணையத்தில் மொய்த்துவருகின்றன. அந்த வகையில், தாய்லாந்தைச் சேர்ந்த மூ டெங் என்ற குட்டி நீர்யானை, அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்வே வெற்றிபெறுவார் எனக் கணித்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

தாய்லாந்தின் சிரச்சாவில் காவ் கியோவ் என்ற திறந்தவெளி உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் நீர்யானைகள் வளர்க்கப்படுகின்றன. அந்த வகையில், மூ டெங் என்ற குட்டி நீர்யானைக்கும் உணவளிக்கும் வகையில், இரண்டு தர்பூசணிப் பழங்கள் தனித்தனியாக சிறிது இடைவெளியில் வைக்கப்படுகின்றன. அதில், அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப்வின் பெயர் ஒரு பழத்திலும், கமலா ஹாரிஸின் பெயர் மற்றொரு பழத்திலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

இதில், அந்த நீர் யானை நேராக டொனால்டு ட்ரம்ப் எனப் பெயர் எழுதி வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழத்தைச் சாப்பிடுகிறது. இதன்மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறுவார் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிறந்த, இந்த மூ டெங் நீர்யானை, இணையத்தில் வைரலாகப் பேசப்படுகிறது. முன்னதாக, சமீபத்திய கருத்துக்கணிப்பில், டொனால்ட் டிரம்ப், வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகத் துல்லியமான பொருளாதார நிபுணர் என்று அழைக்கப்படும் கிறிஸ்டோஃப் பாராட், ட்ர்ம்பே வெற்றிபெறுவார் என கணித்துள்ளார்.

இதையும் படிக்க: ”இந்து - சீக்கியர் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் திட்டம் தீட்டுகிறது..” - கனடா எம்.பி. கருத்து

கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்கா | அதிபர் தேர்தலில் பேசுபொருளான ‘அணில்’.. கமலா ஹாரிஸுக்கு பின்னடைவா?

மறுபுறம், உலகளவில் புரட்சியை ஏற்படுத்திவரும் செயற்கை நுண்ணறிவும் (AI) அமெரிக்க அதிபர் தேர்தலில் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த சமீபத்திய பரிசோதனையில், ChatGPT மெரிக்க தேர்தல் முடிவுகளை முன்னறிவிக்கும் 'AI நாஸ்ட்ராடாமஸின்' நடவடிக்கையை ஏற்றுக்கொண்டது. அந்த வகையில், வழக்கமான கருத்துக்கணிப்புகள் அல்லது பகுப்பாய்வுகளைப் போலல்லாமல், ChatGPTஇன் கணிப்புகளில் ஆச்சரியமான அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சாத்தியமான சமூக அமைதியின்மை ஆகிய இரண்டும் அடங்கியிருந்தது. அதன்படி, டொனால்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான மோதலின் முடிவு குறித்து கேட்டபோது, ​​ChatGPT ஒரு மாற்று முடிவை முன்மொழிந்தது. முக்கிய வேட்பாளருக்கு வெற்றியை பரிந்துரைப்பதற்கு பதிலாக, ட்ரம்ப் அல்லது ஹாரிஸ் இருவரும் இறுதியில் வெற்றிபெற மாட்டார்கள் என்று AI சுட்டிக்காட்டியுள்ளது. மாறாக, ChatGPT மறைமுகமாக, நிழலில் இருந்து ஓர் இருண்ட குதிரை அதிகாரத்தைக் கைப்பற்றும் எனப் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து அதுவளித்த தொடர் பதில்களில், டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் எதிர்காலத்தில் அரசியல் மேடையில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்றும், இதேபோல், எலான் மஸ்க்கும் குறிப்பிட்ட அளவில் பங்கு வகிப்பார் எனவும் அது தெரிவித்துள்ளது.

ட்ரம்ப், கமலா ஹாரிஸ்
ட்ரம்ப், கமலா ஹாரிஸ்pt web

அமெரிக்காவில், தற்போது நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், 50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க அவர்களில் ஏற்கெனவே 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலானது நிறைவு பெற்ற உடனேயே, வாக்கு எண்ணிக்கையானது தொடங்கிவிடும், ஆகையால், இந்திய நேரப்படி நாளை மாலையே முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ’கேங்க்ஸ்டர்’ லாரன்ஸ் பிஷ்னோய் முகம் பொறித்த டி-ஷர்ட்.. சிக்கலில் விற்பனை செய்த நிறுவனம்!

கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப்
தீவிரமான கட்டத்தில் அதிபர் தேர்தல்: ஆயத்தமாகும் அமெரிக்கா.. களம் எப்படி இருக்கிறது?

அமெரிக்காவில்  அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

அமெரிக்க தேர்தலில் அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. Electoral College எனப்படும் முறை மூலம் அதிபர் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் அங்கு இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரல் பிரதிநிதிகள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். வாக்காளர்கள் தேசிய அளவில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களையன்றி மாநில அளவில் அக்கட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் தேர்வு செய்வார்கள். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்த 50 மாகாணங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட உள்ள, 538 பிரதிநிதிகளில் 270 பேரின் ஆதரவைப் பெறுபவர் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

டெனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்
டெனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்முகநூல்

அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அடிப்படையில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களைப் பெரும்பாலும் மூன்று வகைகளாக, சிவப்பு, நீலம் மற்றும் ஸ்விங் மாநிலங்கள் என வகைப்படுத்தப் படுகின்றன. அதாவது, 1980 முதல் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றிபெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள் என்றும், 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் நீல மாநிலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் ஸ்விங் மாநிலங்களில், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகள் மாறிமாறி வருகின்றன. அந்த வகையில், அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட 7 ஸ்விங்க் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. இந்த 7 மாநிலங்கள்தான் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களாகப் பார்க்கப்படுகிறது. அதிலும், பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் போன்ற முக்கிய போர்க்கள மாநிலங்கள் தங்கள் போட்டித்தன்மையின் காரணமாக தேர்தலை தீர்மானிக்கக்கூடியதாக விளங்குகிறது.

இதையும் படிக்க: ’சட்டம் ஒழுங்கு சரியில்லை..’ பவன் கல்யாண் பேச்சை கையிலெடுத்த ரோஜா.. பதிலடி கொடுத்த வங்கலபுடி அனிதா!

கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப்
சூடுபறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனுக்கு சவால் விட்ட டொனால்டு ட்ரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com