"இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்போம்" - நேபாள பிரதமர் !

"இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்போம்" - நேபாள பிரதமர் !
"இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்போம்"  - நேபாள பிரதமர் !
Published on

இந்தியா ஆக்கிரமித்துள்ள நேபாளத்தின் பகுதிகளைப் பேச்சுவார்த்தை மூலம் மீட்போம் என்று அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி தெரிவித்துள்ளார்.

அண்மையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய நேபாள வரை படத்தை வெளியிட்டுப் பேசிய பிரதமர் ஷர்மா ஓலி " இந்தியப் பகுதிகளான காலாபானி, லிம்பியாதுரா, லிபுலேக் பகுதியை என்ன ஆனாலும் நேபாளத்திற்குக் கொண்டு வருவோம்" எனத் தெரிவித்தார். இது இருநாட்டு உறவுகளுக்கிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் சீனாவின் தூண்டுதலின் பெயரிலேயே நேபாளம் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. அடுத்த கட்டமாக வரை படம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் " அரசியல் எல்லையை நிர்ணயிக்கும் முன்னர் நேபாளம் விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்துச் செய்ய வேண்டும். திபெத்துக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது நலம்" என்று கூறியிருந்தார். இதற்கு நேபாளம் பிரதமர் ஷர்மா ஓலி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது "இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்போம். 1961, 1962 முதல் இந்தியா தங்கள் ராணுவத்தை காலாபானியில் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அந்தப் பகுதி எங்களுடையது. செயற்கையான காளி நதியைக் காட்டி இந்தியா அந்த இடத்துக்கு உரிமை கோருகிறது. அவர்கள் காளி கோயில் ஒன்றையும் அங்குக் கட்டியிருக்கிறார்கள். எங்களுடைய உரிமை கோரல் வரலாற்று ஆவணங்களையும் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டது" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com