சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்ட வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தைக் கடந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்கு சென்றடைந்தது.
வாயேஜர்-2 ஹெலியோபாஸ் பகுதியை கடந்து சென்றது நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலம் ஆயிரத்து 800 கோடி கிலோ மீட்டர்களை கடந்து தற்போது சூரிய குடும்பத்தைக் கடந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்டர்ஸ்டெல்லர் பகுதி என்பது நட்சத்திரங்களுக்கு இடையிலான விண்வெளி பகுதியாகும். இங்கு இதுவரை ஏராளமான விண்மீன்கள் வெடித்து சிதறியுள்ளது.
சூரிய மண்டலத்தின் எல்லையைக் கடப்பது சாதாரண விஷயமல்ல. சூரியனின் ஈர்ப்பு விசையால் அதன் புலங்களைக் கடக்க முற்படும்போது ஏற்படும் வெப்பம் அசாதாரமானது. இதனையும் தாங்கிக்கொண்டு வாயேஜர்-2 விண்கலம் இண்டர்ஸ்டெல்லர் பகுதியை கடந்துள்ளது. ஏற்கனவே வாயேஜர்-1 2012 ஆம் ஆண்டு இன்டர்ஸ்டெல்லர் பகுதியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வாயேஜர்-2 சூரியக் குடும்பத்தின் எல்லைப் பகுதியான ஹெலியோபாஸ் பகுதியைச் சென்றடைந்தது. தற்போது வாயேஜர்-2 ஹெலியோபாஸ் பகுதியையும் கடந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்குள் சென்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
வாயேஜர்-2 பூமியிலிருந்து ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் சராசரியாக 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது. வாயேஜர்-2 வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு வாயுக்கோள்களையும் கடந்து சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையையும், இன்டர்ஸ்டெல்லர் பகுதியை கடந்து சென்ற இரண்டாவது விண்கலம் என்ற பெருமையை பெறுகிறது.
வாயேஜர்-2 விண்கலம் இன்டர்ஸ்டெல்லார் பகுதியில் சூரியனின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களை ஆய்வு செய்யும் என நாசா தெரிவித்துள்ளது