அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்!

அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்!
அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்த ட்ரம்ப்!
Published on

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ள அதிபர் டிரம்ப், தகுதி, திறமை அடிப்படையில் 57 சதவிகித வெளிநாட்டினருக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 11 லட்சம் பேருக்கு அந்நாட்டு குடியுரிமை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66சதவிகிதம் பேருக்கும், திறமை அடிப்படையில் 12சதவிகிதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில் மாற்றம் செய்து வேலை மற்றும் திறமை அடிப்படையில் 57 சதவிகிதம் வெளிநாட்டினருக்கு கிரின்கார்டுக்கு பதிலாக அமெரிக்காவை கட்டமைக்கும் குடியுரிமையை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதாவது தற்போது 12 சதவிகிதம் என்பது 57 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

திறமையின் அடிப்படையில் பலருக்கு குடியுரிமை கிடைக்க இந்த புதிய திட்டம் வழிவகை செய்யும் என கூறப்படுகிறது, அதாவது கல்வி, ஆங்கில அறிவு, தொழில் அறிவு, மேற்படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும். இது ஒருசாரருக்கு வாய்ப்பாக அமைந்தாலும் உறவினர்கள் வசித்து வருவதை காரணமாக கொண்டு புதிதாக அமெரிக்கா வருபவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com