அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாக வளாகம் மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் விர்ஜினியா பல்கலைக்கழகமும் ஒன்று. பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு விழா ஒன்று நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகம் உடனடியாக மூடப்பட்டது. ‘பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்குச் செல்லவேண்டாம். விரைவில் அடுத்த தகவல் வெளிவரும்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முழுத் தகவல் இன்னும் வெளிவரவில்லை.