பொங்கல் திருநாளுக்கு அங்கீகாரம்: விர்ஜீனியா தமிழர்கள் உற்சாகம்

பொங்கல் திருநாளுக்கு அங்கீகாரம்: விர்ஜீனியா தமிழர்கள் உற்சாகம்
பொங்கல் திருநாளுக்கு அங்கீகாரம்: விர்ஜீனியா தமிழர்கள் உற்சாகம்
Published on

தமிழர் திருநாளை அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணம் அங்கீகரித்த பின்னர் வரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் தயாராகி வருகின்றனர். 

அமெரிக்காவில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாட முதல் மாகாணமாக விர்ஜீனியா மாநில அரசு அங்கீகாரம் வழங்கியது. இதுதொடர்பாக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் டேவிட் புலோவா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 14ஆம் தேதி வரும் முதல் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட விர்ஜீனியா தமிழர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

விர்ஜீனியா மட்டுமின்றி அமெரிக்காவின் பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அங்கீகாரம் அமைந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com