இப்படியொரு அழகான மணப்பெண்ணை பார்த்ததுண்டா? - லூனாவின் க்யூட்டெஸ்ட் வீடியோ!

இப்படியொரு அழகான மணப்பெண்ணை பார்த்ததுண்டா? - லூனாவின் க்யூட்டெஸ்ட் வீடியோ!
இப்படியொரு அழகான மணப்பெண்ணை பார்த்ததுண்டா? - லூனாவின் க்யூட்டெஸ்ட் வீடியோ!
Published on

செல்லப்பிராணிகள் என்றாலும் எல்லோர் நினைவுக்கும் முதலில் எட்டுவது என்னவோ நாய்க்குட்டிகள்தான். அவை செய்யும் சேட்டைகளும், குறும்புகளும், க்யூட் செயல்களும் நாய்களையே பிடிக்காது என சிதறி ஓடுபவர்களுக்கு கூட பிடித்துப்போய்விடும்.

நாய்கள் தொடர்பான வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்கள் வாயிலாக காண கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட வைரலான வீடியோ பற்றிதான் பார்க்க போகிறோம்.

கொஞ்சிக்கொள்ளும் நாய்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இரண்டு நாய்கள் அழகாக தயாராகி திருமணம் செய்துக்கொள்ளும் வீடியோ பார்த்ததுண்டா?

லூனாவின் க்யூட் வீடியோ: Instagram

சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட அந்த வீடியோ hey my name is luna என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அதில், பெண் நாய் ஒன்று ஏஞ்சல் போன்று வெள்ளை கவுன் உடுத்தி தலையில் மலர்களால் பின்னப்பட்ட க்ரீடத்துடனும், கருப்பு கோட் போட்டு ஸ்டைலாக ஆண் நாயும் பெண் ஒருவரின் முன்பு திருமணம் செய்துக்கொள்ளும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

அதனை கண்ட நெட்டிசன்கள், “நான் இதுவரை பார்த்த மணப்பெண்களில் இவர் தான் அழகாக இருக்கிறார். மணமகன் சூப்பர் ஹேண்ட்சம்” என்றும், ‘மிக அழகான மணமகள்’ என்றும், ‘அவர்கள் கல்யாணத்தின் மற்ற வீடியோக்களையும் பார்க்க வேண்டும்’ எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com