சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், ஒரு நாயை ஓநாய்போல காட்ட முயன்றது பற்றிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரு வினோதமான சம்பவத்தில், சீனாவில் ஒரு மிருகக்காட்சிசாலை, ஒரு நாயை ஓநாய் போல காட்ட முயன்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு கூண்டில் அமர்ந்திருக்கும் நாயின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடமிருந்து நம்பமுடியாத எதிர்வினைகளை உருவாக்கியது.
ஹூபே மாகாணத்தின் சியானிங்கில் உள்ள சியாங்வூஷன் மிருகக்காட்சி சாலையில் சூ என்ற பார்வையாளர், நாய் போல தோற்றமளிக்கும் விலங்கை படமாக்கி வீடியோவில், “இது ஓநாயா? ” என்று கேள்வியெழுப்பினார்.
மிருககாட்சி சாலையில் அந்த கூண்டில், ஒரு ஓநாய் வசித்து வந்ததாகவும் ஆனால் அது முதுமையால் இறந்துவிட்டதாகவும், மிருகக்காட்சி சாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார், மேலும் அந்த இடத்தில் நாய் ஒன்று தற்காலிகமாக வைக்கப்பட்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது.