பசிபிக் பெருங்கடலில் விசித்திர விலங்கு ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பசிபிப் பெருங்கடலில் முதன்முதலாக ஒரு அரியவகை உயிரினம் கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு காலனித்துவ சினிடேரியன் வகையைச் சேர்ந்த சோலும்பெல்லுலா கடல்பென் அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பசிபிக் கடலில் ஜான்ஸ்டன் அட்டோலுக்கு வடக்கே இதுவரை ஆய்வு செய்யப்படாத கடற்பகுதியின் 2994 மீட்டர் தூரத்தில் இந்த உயிரினம் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சோலும்பெல்லுலா கடல்பென்னுக்கு 2-மீட்டர் நீளமுள்ள தண்டிலிருந்து 40 செ.மீ.க்கு மேல் நீளும் பின்னேட் கூடாரங்கள் கொண்ட ஒரு பெரிய உணவருந்தும் பகுதி இருக்கிறது எனவும் கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த விசித்திர உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.