பிரான்ஸில் 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கார்கள் அடுத்த ஆண்டு ஏலத்தில் விடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிஸ் நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 1930 முதல் 1960க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வெளிவந்த 50 க்கும் மேற்பட்ட மாடல் கார்களை ஏலத்திற்கு விட கார் விற்பனை நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. வரும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி இந்த ஏல நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பழமையான கார்கள் இந்த ஏல நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தவுள்ளன.
மேலும் 1939 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆல்ஃபா ரோமியோ பெர்லெனெட்டா , 1957 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஃபெராரி ,1966 ஆம் ஆண்டு வெளிவந்த லே மான்ஸ் உள்ளிட்ட பழைய மாடல் கார்கள் காட்சிப்படுத்தவுள்ளன. இந்த கார்கள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.