சர்வதேச அளவில் சிறந்த நகரமாக வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு உலக அளவில் சிறந்த நகரங்கள் பற்றிய ஆய்வை நடத்தியது. 231 நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன. இதில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
வாழ்வதற்கு மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் தேர்வாகியுள்ளது. லண்டன், பாரிஸ், டோக்கியோ, நியூயார்க் நகரங்கள் முதல் முப்பது இடங்களுக்குள் கூட வரவில்லை. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.