மனிதாபிமான உதவிகளுடன் காஸா பகுதிக்கு எகிப்து எல்லை வழியாக லாரிகள் செல்லும் வீடியோ காட்சிகளை, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
மருந்துகள், உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட
பொருட்களுடன், காஸா பகுதிக்கு செல்ல, 800 லாரிகளுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கட்டமாக எகிப்து எல்லை வழியாக, காஸா பகுதிக்குள் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, காஸா பகுதி மக்களுக்காக, மனிதாபிமான
உதவிகளுடன் அமெரிக்க போர் விமானம் ஒன்றும், எகிப்து நாட்டில் தரையிறங்கி உள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், கத்தாரில் ஏற்பட்ட
ஒப்பந்தத்தின்படி தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம்
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் மேலும் இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்த போர் நிறுத்தத்தால், வெடிகுண்டு தாக்குதலும், விமானப்படையினரின் சத்தங்களும், பிணக்குவியல்களும் முதல்முறையாக குறைந்துள்ளதாக காஸாவில் இருந்துவரும் தகவல்கள் கிடைத்துள்ளன.