அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த பயணத் தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெனிசுலா, அவர் ஒரு இனவாதி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
வெனிசுலா தலைநகர் காராகஸில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் அர்ரியேசா, அமெரிக்கா மற்றும் வெனிசுலா மக்கள் நட்பாகவே பழகி வருகின்றனர் என்றும், ஆனால் அதிபர் ட்ரம்ப் மட்டுமே அதற்கு விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். தற்போது எழுந்துள்ள பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அமெரிக்கா தரப்பில் இருந்து ஏதேனும் தாக்குதல் எழுந்தால் தங்களது தாய்நாட்டை தற்காத்து கொள்ள ராணுவத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் எனவும் ஜார்ஜ் தெரிவித்தார்.