அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி தேர்வு - மலேசியா அறவாரியம்

அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி தேர்வு - மலேசியா அறவாரியம்
அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி தேர்வு - மலேசியா அறவாரியம்
Published on

அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசியா அறவாரியம் அறிவித்துள்ளது.

மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' என்ற நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தரப்படும் இவ்விருது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாகக் கொண்டது. (இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய்) இவ்விருது பற்றிய அறிவிப்பினை சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் அறிவித்தார்.

சு.வெங்கடேசன் எழுதிய முதல் நாவலான காவல்கோட்டம் 2011ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றது. மதுரை மக்களவை உறுப்பினராக இருக்கும் சு.வெங்கடேசனின் 'வீரயுகநாயகன் வேள்பாரி' நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகர் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com