அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியாக ஏற்கனவே ஃபைசர் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாடனா தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவில் ஏற்கனவே ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாடனா தடுப்பூசி தயாராக உள்ளது. இந்த மாடனா தடுப்பூசியை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும். முதல்கட்டமாக இந்த தடுப்பூசி அவசரகால தேவைக்கு பயன்படுத்தப்படும் என்றார்.
முன்னதாக, மாடனா நிறுவனத்தின் தடுப்பு மருந்து கொரோனா தீவிரமடைவதை 100% தடுத்து பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகின. எனவே, இந்தத் தடுப்பு மருந்திற்கு அனுமதிகேட்டு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பு மருந்தினை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம் எனவும், இந்திய ரூபாயில் மாடனா தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் விலை 1500 ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.