”இனிமே டிக் டாக்கெல்லாம் இங்கே ban-ம்மா” - இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் அதிரடி!

”இனிமே டிக் டாக்கெல்லாம் இங்கே ban-ம்மா” - இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் அதிரடி!
”இனிமே டிக் டாக்கெல்லாம் இங்கே ban-ம்மா” - இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் அதிரடி!
Published on

இந்தியாவில் டிக் டாக் தடையான நிலையில் இப்பொழுது அமேரிக்காவிலும் தடையாக உள்ளது. டிக் டாக் மூலம் தகவல் கசிவுகிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. சமீபமாக நிகழும் நில அரசியல் காரணமாக அமேரிக்காவில் அதிகமாக பேசுபொருளாக Tik Tok அமைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் அமேரிக்காவில் உள்ள Alabama மற்றும் Utah ஆகிய இரண்டு மாவட்டங்களும் பாதுகாப்பு காரணத்திற்காக டிக் டாக் செயலியை அம்மாநிலத்தின் அரசு சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்-களில் தடைசெய்துள்ள நிலையில் இப்போது அமேரிக்கா முழுவதும் டிக் டாக்-ஐ தடை செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் FBI இயக்குநர் கிறிஸ் ரேயின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சீன அரசாங்கம் மில்லியன் கணக்கான அமெரிக்க பயனர்களின் தரவு சேகரிப்பைக் கட்டுப்படுத்த பைட் டான்ஸ்-க்குச் சொந்தமான செயலியைப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.

ஏனெனில், டிக் டாக்கின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. மேலும் இதன் மூலம் அமேரிக்காவில் உள்ள நிறுவனங்களின் தகவல்கள் கசிவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com