சர்கோ பாட்
சர்கோ பாட் முகநூல்

அமெரிக்கப் பெண் எடுத்த விபரீத முடிவு; விவாதமான சர்கோ பாட் பெட்டி!

அமெரிக்க பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது சமூக தளங்களில் விவாத பொருளாகியுள்ளது.
Published on

சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்வதற்கென்றே சர்கோ பாட் (SARCO POD) பெட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் ஒருவர் படுத்தவுடன் தற்கொலைக்கான அனுமதியை கேட்டு பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும். அதை ஏற்று பொத்தானை அழுத்தியவுடன் பெட்டியின் மூடி சாற்றிக்கொள்ளும்.

உள்ளே உள்ள காற்றில் ஆக்சிஜன் முழுமையாக நீங்கி நைட்ரஜன் நிரம்பும். அப்போது உள்ளே இருப்பவர் மூச்சுத்திணறி இறந்துவிடுவார். இந்த இயந்திரத்தை பயன்படுத்தி முதல்முறையாக 64 வயதான அமெரிக்க பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீண்டகாலமாக நோய் பாதித்து அது குணமாகாத நிலையில் அமைதியான முறையில் இறக்க விரும்பி அவர் இந்த முறையை தேர்வு செய்திருந்தார்.

சர்கோ பாட்
’என்ன சொல்றீங்க’|ரூ.1,600 கட்டணம்; வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்.. ஸ்விட்சர்லாந்து கண்டுபிடிப்பு!

ஆனால், விதிகளை மீறியதாக கூறி இந்த தற்கொலைக்கு உதவியவர்களை ஸ்விஸ் காவல்துறை கைது செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பிறர் உதவியுடன் தற்கொலை செய்வது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சட்டப்பூர்வமான ஒன்றாக உள்ள நிலையில் இக்கைது நடைபெற்றுள்ளது.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்லபுதிய தலைமுறை

மறுபுறம் இது போன்று தற்கொலையை ஊக்குவிப்பது சரியான செயல்தானா என்ற விவாதமும் சமூக தளங்களில் எழுந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com