லஷ்கர் பயங்கரவாதி ஹஃபீஸை விடுதலை செய்வதா?: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

லஷ்கர் பயங்கரவாதி ஹஃபீஸை விடுதலை செய்வதா?: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
லஷ்கர் பயங்கரவாதி ஹஃபீஸை விடுதலை செய்வதா?: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
Published on

லஷ்கர் பயங்கரவாதி ஹஃபீஸை விடுதலை செய்வதா?: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்ததற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

2008ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 164 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் ஈ தொய்பா எனும் அமைப்பு நடத்தியது. இந்த அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் சையத் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் படி கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 10 மாதங்களுக்கு அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவரது காவல் கடந்த 23ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் அரசு லாகூர் நீதிமன்றத்தில் அவரின் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரியிருந்தது. ஆனால் அந்த மனுவை லாகூர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனைத் தொடர்ந்து ஹபீஸ் விடுதலையாகியுள்ளார். 

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்ததற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹபீஸ் சையத்தை உடனடியாக மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் நெருக்கமான நட்புறவை பேணவே அமெரிக்கா விரும்புவதாகவும், இதற்காக பாகிஸ்தான் தனது மண்ணில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஐநா சபையும் அமெரிக்காவும் ஹபீசை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com