அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசு சார்பில் செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை சதவிகிதம் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த வேலையின்மை சதவிகிதமாகும்.
கடைசியாக 1969ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையின்மை சதவிகிதம் 3.5 ஆக பதிவாகியிருந்தது. அமெரிக்காவில் கடந்த மாதம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியிருந்தாலும் அவற்றின் ஊதியம் மிகவும் குறைவாகவே இருந்தது என்று இந்த தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 1,36,000 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனினும் கல்வித்துறை, அரசாங்கத் துறை, நிதித் துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் குறைவாக தான் இருந்தது என்று இந்த தரவுகள் சுட்டி காட்டுகின்றன. அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் 1,68,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.