இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் ஏராளமானோர் கொலு வைத்து நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் தங்களது வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்துள்ளனர். குழந்தைகளுக்கு பாரம்பரியத்தைச் சொல்லித்தரும் வகையில் இந்த விழாக்களைக் கொண்டாடுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். பெண் கடவுள் அம்பிகையை போற்றும் வகையில் நாடு முழுவதும் புரட்டாசி மாதத்தில் தங்கள் வீடுகளில் கொலு வைத்து மக்கள் வழிபடுவர். இந்த பழக்கத்தை மறவாத அமெரிக்கா வாழ் தமிழர்கள் தங்கள் வீடுகளிலும் கொலு வைத்து நவராத்திரி விழாவை கொண்டாடுவது அங்கு வசிக்கும் அமெரிக்க மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.