2.12 பில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையை ரத்து செய்யக் கோரிய ஜான்சன் & ஜான்சன் மனு தள்ளுபடி

2.12 பில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையை ரத்து செய்யக் கோரிய ஜான்சன் & ஜான்சன் மனு தள்ளுபடி
2.12 பில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையை ரத்து செய்யக் கோரிய ஜான்சன் & ஜான்சன் மனு தள்ளுபடி
Published on

பேபி பவுடர் பயன்படுத்தியதால் நுரையீரல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2.12 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மனுவை நிராகாரித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

குழந்தைகளுக்கான முகப் பவுடர் சந்தையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். குழந்தைகளுக்கு மிக பாதுகாப்பான பவுடர் என்று கருதப்பட்டாலும், இதை பயன்படுத்திய பெண்கள் பலருக்கு கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் உலகின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதற்கு காரணம், இந்த பவுடரில் கலக்கப்படும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்தான் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வக பரிசோதனை ஆதாரங்களும் இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்காவில் மிசவ்ரி நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2.12 பில்லியன் டாலர் இழப்பீடாக வழங்க ஜான்சன் நிறுவனத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2.12 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகாரித்துள்ளது. இந்த தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர் தளத்திலும் இந்த தீர்ப்பு ட்ரெண்ட் ஆகி வருகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com