அமெரிக்காவில் நுழைய 6 முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க உத்தரவிட்டார். இதனால், சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு விசா வழங்க சில மாதங்களுக்கு தடை பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த 6 நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள், தங்களது நெருங்கிய உறவினர்களைப் பார்க்கவும் தொழில் ரீதியாக அமெரிக்கா வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.