அமெரிக்காவில், ஹெச்.1பி விசா நடைமுறைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் ஹெச்.1.பி விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் தங்கி பயில்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும்
பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் உயர் கல்வி மையங்கள் உள்ளிட்ட சில பிரிவுகளில், வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்தும் வகையில், ஹெச்.1பி விசா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனையடுத்து, குறிப்பிட்ட சில விசாக்களுக்கான நடைமுறைகளை மட்டும் அமெரிக்கா அரசு வேகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தங்கியுள்ள விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என பலரும் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.