அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், ஒவ்வொரு வாக்கினையும் பெற கடுமையாக உழைப்பேன் என கூறியுள்ளார். வரும் நவம்பரில் மக்களுக்கான தனது பரப்புரைக்கு வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வரலாற்றில் துணை அதிபராக பதவி வகித்த முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமையை பெற்றுள்ள கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப்பை விட மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்றுள்ளதாக WATT AREWWE நாளிதழ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட பைடன் சில காரணங்களால் விலகிய நிலையில், கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.