அமெரிக்க அதிபர் தேர்தல்| ”அவர்கள் ஆபத்து நிறைந்தவர்கள்”-ட்ரம்ப், கமலா ஹாரிஸ் நேரடியாக காரசார விவாதம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் பங்குபெற்ற விவாதம் காரசாரமாய் நடைபெற்றது.
டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்
டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்எக்ஸ் தளம்
Published on

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவரே அதிபர் தேர்தலிலிருந்தே விலகினார். இதையடுத்து, துணை அதிபரான கமலா ஹாரிஸ், அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்குநேர் விவாதித்துக்கொள்வது வழக்கம். தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த விவாதம், தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

விவாதத்தின்போது நாட்டின் முக்கியப் பிரச்னைகள் குறித்தும், ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் வேட்பாளர்கள் தங்கள் கருத்தை முன்வைப்பார்கள். எதிர் வேட்பாளரின் குறைகளையும் எடுத்துரைப்பார்கள். இதன்மூலம் மக்களின் செல்வாக்கை பெற முடியும். அந்த வகையில் முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே நடைபெற்ற விவாத நிகழ்வின்போது, ட்ரம்பின் பல கேள்விகளுக்கு பைடன் பதில் சொல்ல முடியாமல் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியதுடன், அவரே அதிபர் வேட்பாளர் பட்டியலில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு ட்ரம்ப் ஆகிய இருவரும் நேற்று (செப்.10) நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பென்சில்வேனியா மாகாணம் பிஃலாடெல்ஃபியா நகரில், ஏபிசி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விவாதத்தை, டேவிட் ம்யூர்(DAVID MUIR), லின்ட்சே டேவிஸ் (LINDSAY DAVIS) ஆகியோர் நெறிப்படுத்தினர். விவாதத்தின் தொடக்கத்தில், டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்கு சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டன.

இதையும் படிக்க: பாகிஸ்தான்|மகள் தலையில் சிசிடிவி கேமரா; 24மணிநேரமும் கண்காணிக்கும் தந்தை-பின்னணி இதுதான் #ViralVideo

டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல் | இத்தனை மில்லியன் டாலர்களா?.. ஒரே மாதத்தில் அதிக நிதி திரட்டிய கமலா ஹாரிஸ்!

இந்த விவாதத்தின்போது பேசிய கமலா ஹாரிஸ், ”நம்மை பிரிப்பனவற்றைவிட, நாம் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு வருவதற்கான முக்கியத்துவம் பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும் ஜனாதிபதியையே அமெரிக்க மக்கள் விரும்புகிறார்கள் என நான் வலுவாக நம்புகிறேன்” என கூறினார்.

”2025-ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் ஆபத்து நிறைந்தவை” என எதிர்க்கட்சியை சாடிய அவர், ”அனைத்து அமெரிக்கர்களுக்கான ஜனாதிபதியாக இருப்பேன் என உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்” என்றார்.

தொடர்ந்து அவர், ”டொனால்டு ட்ரம்ப் ஆட்சியில் இருந்து செல்லும்போது எதை விட்டுச் சென்றார் என்பது குறித்து பேசவேண்டும். அவரது ஆட்சியில் வேலையின்மை பிரச்னை அதிகரித்தது. நாட்டின் மருத்துவத்துறை மோசமாக பாதிக்கப்பட்டது. மருத்துவச் சேவைகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன.

நமது ஜனநாயகம் மீது மோசமான தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றார். ட்ரம்ப் செய்த குளறுபடிகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் சரிசெய்தோம். உண்மையில் மக்களுக்கான திட்டம் எதுவும் ட்ரம்பிடம் இல்லை. ஏனெனில், அவரைப் பாதுகாப்பதிலேயே அவருக்கு ஆர்வம் அதிகம். அதனைவிடுத்து உங்களை அவர் கவனிக்கமாட்டார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்
‘நான் வென்றால் அவருக்கு அரசு பதவி’ - மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்... மஸ்க் ரியாக்‌ஷன் என்ன?

இதையடுத்து பேசிய டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸை வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “ஜோ பைடன் ஆட்சியில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் அமெரிக்க மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பைடனின் தவறான கொள்கைகளை கமலா ஹாரிஸும் பின்பற்றுகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர், “நம்முடைய நாட்டிற்குள் சட்டவிரோதமாகச் செயல்பட்டவர்களை உள்ளே வர அனுமதித்தவர்கள் பைடனும், கமலா ஹாரிஸும். தவிர, அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆபத்து நிறைந்தவர்கள். அதிகளவிலான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள். நம்முடைய நாட்டின் வரலாற்றிலேயே, மிக சிறந்த பொருளாதாரத்தை நான் உருவாக்கி வைத்திருந்தேன். இதனை மீண்டும் நான் உருவாக்குவேன். இன்னும் சிறப்பாக ஆக்குவேன்” என்றார்.

தொடர்ந்து இருவர் இடையேயான விவாதம் காரசாரமாய் நடைபெற்றது. இந்த விவாதமும் அமெரிக்காவில் பேசுபொருளாகி உள்ளது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண்களின் ஆதரவும் உள்ளது. இதனால், ட்ரம்ப்க்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்து வருகின்றார். என்றாலும், இது வாக்குகளாக மாறுமா என்பது தேர்தலுக்கு பின்னரே தெரிய வரும்.

இதையும் படிக்க: ”அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை; இந்திய தத்துவஞானியே..” - ம.பி அமைச்சர் சர்ச்சை பேச்சு!

டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை.. உருவரீதியாகச் சீண்டும் ட்ரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com