நவம்பரில் அமெரிக்கா அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீசும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவார் என முன்மொழியப்பட்ட நிலையில், தற்போது டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து துணை அதிபர் பதவிக்கு ஓஹியோ மாகாண செனட்டரான ஜேம்ஸ் டேனிட் வான்ஸ் போட்டியிடுவார் என டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்பின் முந்தைய ஆட்சியில் அவரை கடுமையாக விமர்சித்து வந்த ஜே.டி.வான்ஸ் பெயரை டிரம்ப் அறிவித்தது குடியரசுக் கட்சியினர் மட்டுமின்றி அரசியல் விமர்சகர்களையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.