அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓராண்டு கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும். அந்த வகையில் அடுத்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.
அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை, அதாவது எட்டு ஆண்டுகளுக்கு அதிபராக பதவி வகிக்க முடியும் என்பதால் 2020 அதிபர் தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட இருக்கிறார். அதே வேளையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஜனநாயக கட்சி முனைப்பு கொண்டுள்ளது.