"நாட்டை ஒன்றிணைக்க.." - ட்ரம்புக்கு அழைப்பு.. கமலா ஹாரிஸுக்கு ஆறுதல்.. அதிபர் ஜோ பைடன் சொல்வது என்ன?

புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
joe biden, trump, kamala harris
joe biden, trump, kamala harrisx page
Published on

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

joe biden, trump
joe biden, trump

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை, வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு ஜோ பைடன் அழைப்புவிடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து, ஜோ பைடன் நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஜோ பைடன் சுமுகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். நாட்டை ஒன்றிணைக்க உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: திருமணமான பெண்ணின் புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்ட மேட்ரிமோனி தளம்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

joe biden, trump, kamala harris
”நான் போரை நிறுத்துவேன். போரை நடத்துவதைவிட நிறுத்துவதில்தான் ஜனநாயகம்..”- வெற்றிக்குப் பின் ட்ரம்ப்!

இதைத் தொடர்ந்து ஜோ பைடன் வெளியிட்ட பதிவில், “இன்று அமெரிக்கா பார்க்கும் ஒரு சிறந்த நிர்வாகி கமலா ஹாரிஸ். அவரிடம் நேர்மையும், தைரியமும் உள்ளது. அசாதரண சூழ்நிலையிலும் அவர் ஒரு வரலாற்று பிரசாரத்தை முன்னெடுத்தார். தொடர்ந்து மக்களுக்காக போராடுவார். 2020இல் நான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது, கமலாவை துணை ஜனாதிபதியாக, தேர்ந்தெடுத்ததுதான் நான் எடுத்த முதல் முடிவு.

இதுவே எனது சிறந்த முடிவு ஆகும். கமலா ஹாரிஸ் தொடர்ந்து உரிய நோக்கத்துடனும், உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் அரசை எதிர்த்து குரல்கொடுப்பார். அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ஒரு சிறந்த சாம்பியன் ஷிப்பாக இருப்பார். எல்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்காவின் எதிர்காலத்தில் முத்திரை பதிக்கும்போது அடுத்த தலைமுறையினர் எதிர்பார்க்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார்” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீர்|சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்.. அமளியில் ஈடுபட்ட பாஜக!

joe biden, trump, kamala harris
அதிபர் தேர்தல்| தோல்வியைத் தழுவிய கமலா ஹாரிஸ்.. துயரத்தில் கண்ணீர் வடித்த ஆதரவாளர்கள்! #ViralVideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com