சீனாவின் பொருளாதார சவாலை சமாளிக்கும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

சீனாவின் பொருளாதார சவாலை சமாளிக்கும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
சீனாவின் பொருளாதார சவாலை சமாளிக்கும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
Published on

சீனாவின் பொருளாதார சவாலை சமாளிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சீனாவின் ராணுவ எழுச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அமெரிக்க பாதுகாப்புத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் சீனா தரும் கடும் போட்டியை சமாளிக்கும் வகையில் தங்கள் நாட்டில் புத்தாக்கம் மற்றும் அறிவியல் ஆய்வுகளை முடுக்கிவிட அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதை சாத்தியமாக்கும் வகையில் சுமார் ஏழரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க புத்தாக்கம் மற்றும் சந்தை போட்டி சட்டம் என்ற பெயர் கொண்ட இம்மசோதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா முன்னணி வகிக்க உதவுவதுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியிலும் வலிமையான நாடாக விளங்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள சட்டம் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலும் வளர்ச்சியை தடுக்கும் வகையிலும் உள்ளதாக சீனா விமர்சித்துள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு ரீதியாக உலகளவில் தாங்கள் செலுத்தி வரும் ஆதிக்கத்திற்கு சீனா விடுக்கும் சவால்களை சமாளிக்கும் வகையில் சில உத்தரவுகளை அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அந்நாட்டு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பிறப்பித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலும் இந்த உத்தரவுகளில் சில அம்சங்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com