டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்து தீவை வாங்க விரும்புகிறதா அமெரிக்கா?

டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்து தீவை வாங்க விரும்புகிறதா அமெரிக்கா?
டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்து தீவை வாங்க விரும்புகிறதா அமெரிக்கா?
Published on

கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்கா விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு ஆகும். இயற்கை எழில்கொஞ்சும் இந்த கிரீன்லாந்து தீவை வாங்க, கடந்த 2019- ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், ட்ரம்பின் இந்த விருப்பம் பைத்தியகரமானது என டென்மார்க் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கவே, தனது டென்மார்க் சுற்றுப்பயணத்தையும் டொனால்டு ட்ரம்ப் ரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் விரைவில் டென்மார்க் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து, பிளின்கனிடம் செய்தியாளர்கள் கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்கா இன்னமும் ஆர்வம் காட்டுகிறதா ? என கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த பிளின்கன், “இல்லை” என திட்டவட்டமாக கூறினார்.

இதே போன்று 1946ஆ ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கிரீன்லாந்து தீவை வாங்க முற்பட்டார். ஆனால் அவரது அந்த பேச்சுவார்த்தை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com