ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்துறைக்கான செலவுகளை அமெரிக்கா அதிகரித்துள்ளதாக எஸ்.ஐ.பி.ஆர்.ஐ நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஸ்டாக்ஹோம் இண்டர்நேஷ்னல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்(எஸ்.ஐ.பி.ஆர்.ஐ) நிறுவனம் உலகளவில் பல நாடுகள் ராணுவத்திற்காக செலவிடும் தொகைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் உலகளவில் ராணுவத்திற்கான செலவுகள் 2.6% அதிகரித்துள்ளது. அதாவது கடந்த வருடம் உலக நாடுகள் மொத்தமாக 1.8 டிரில்லியன் அமெரிக்கா டாலர் செலவு செய்ததுள்ளன.
குறிப்பாக அமெரிக்கா தனது ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்கா கடந்த ஆண்டில் 649 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை செலவு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா செயல்படுத்தி வரும் புதிய ஆயுதங்கள் கொள்முறையே இதற்கான காரணம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா தனது ராணுவ செலவை அதிகரித்துள்ளது. அந்த நாடு தனது ராணுவ செலவை 83% அதிகரித்துள்ளது.
அதேபோல ரஷ்யா தனது ராணுவ செலவுகளை 2016ஆம் ஆண்டு முதல் குறைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.